Thursday 1 February 2018

அணுக்கதிர் வீச்சால் கூட பாதிக்கப்படாத ஒரே உயிரினம் எது ?

இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

🌟 மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.

🌟 கண்டமாகவும், நாடாகவும் இருப்பது ஆஸ்திரேலியா மட்டுமே.

🌟 அணுக்கதிர் வீச்சால்கூட பாதிக்கப்படாத ஒரே உயிரினம் கரப்பான்பு+ச்சி.

🌟 கரையான்களுக்கு கண்கள் கிடையாது.

வாழ்க்கையின் முக்கிய ஏழு நிலைகள்.. 1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5. 6. 7. ஹலோ... என்ன தேடுறீங்க?

காதல் வந்த பிறகு என்னத்த சொல்ல...!

இது சிரிக்க மட்டுமே !!

கணவர் : செல்லம் சப்பாத்தி சு+ப்பரா செஞ்சிருக்கடி
மனைவி : 😡😡
கணவன் : நல்லாருக்குன்னு தானே சொல்றேன் அப்ரம் ஏன் முறைக்கிற..
மனைவி : அது தோசை
கணவன் : 😷😷

டாக்டர் : டெய்லி காலைல வெந்நீர் குடிங்க.. எல்லாம் சரி ஆகிடும்
நோயாளி : டாக்டர்.. கல்யாணம் ஆனதுல இருந்து காலைல அதான் குடிக்கிறேன்.. என் பொண்டாட்டி அதுக்கு காப்பின்னு பேரு வச்சி இருக்கா..😰😰

டாக்டர் : வாங்க, உட்காருங்க, சட்டைய கழட்டுங்க, வாயைத் திறங்க, நாக்க நீட்டுங்க.. திரும்பி உட்காருங்க, இழுத்து மூச்சு விடுங்க.... இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?
வந்தவர் : ஒண்ணுமில்லை டாக்டர், என் மகளுக்குக் கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!

இது சாத்தியம் தான் !!

ஒரு மாருதி 800 ஏலத்தில் விட்டுக்கொண்டிருந்தார்கள்... 5 லட்சம்.. 10 லட்சம்... 20 லட்சம்.. 40 லச்சம் வரை ஏலம் ஏறிக்கொண்டே போனது.. அப்போது அங்கெ வந்த ஒருவன் விசாரித்தான்.. "என்னையா இது..? சாதாரண மாருதி 800... இதுக்குபோயி இத்தனை விலை ஏறுதே..??.."

அங்கிருந்த ஒருவர்.. "விஷயம் தெரியாம பேசாதையா..!! இந்த மாருதி கார் இதுவரை 24 தடவ அக்சிடண்ட் ஆகிருக்கு... 24 தடவையும் கணவன் தப்பிச்சிட்டான்.. மனைவி மட்டுமே செத்துப் போயிருக்காங்க..." என்றார்..

உடனே நம்ம ஆளு கத்தினான்.... "ஒரு கோடி"

கிராமியத் தப்பாட்டம்..!

பறை முழக்கம் தற்போது தப்பாட்டம் என அழைக்கப்படுகிறது. "தப்புதல்" என்றால் "அடித்தல்" என ஒரு பொருள் உள்ளது. அடித்தலோடு ஆட்டமும் சேர்ந்து வருவதால், இது தப்பாட்டம் எனப் பெயர் பெற்றது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை திணைகளுக்கும், ஐந்து வகை பறைகள் இருந்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது. திருமணம், கோயில், இறப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே தப்பாட்டங்கள் உள்ளன. மற்ற கிராமியக் கலைகளில் ஒருவர் இசைக்க மற்றொருவர் தான் ஆடுவர். தப்பாட்டத்தில் மட்டும் தான், ஆடுபவரே இசைக்க வேண்டும்.









No comments:

Post a Comment