Thursday 10 May 2018

கண்டுபிடியுங்க பார்க்கலாம் !!

1. ராஜாவும், ராணியும் சுற்றுலா போறாங்க. அவங்களுக்கு மூன்று மகன்கள். எல்லா மகன்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சி. அந்த மகன்களுக்கு மூன்று மகள்கள் இருக்காங்க. அப்படீனா சுற்றுலாவுக்கு மொத்தம் எத்தனை பேர் போயிருப்பாங்க?

2. ஒரு ஆள் நிலத்த பார்த்துப் போயிக்கிட்டிருக்காரு. அவர் கிட்ட ஒரு மூட்டை இருக்கு. அதைப் பிரிக்காம இருந்தா, அவர் இறந்திடுவார். அப்படி அந்த மூட்டையில என்னதான் இருக்கு?

3. இருபத்தி இரண்டை சீனாவில் எப்படிச் சொல்லுவாங்க?

4. ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் திருடன் புகுந்து கடை மேலாளரைக் கல்லாப் பெட்டியோட 'கோட் வேர்ட்"டை (ஊழனந றழசன) சொல்லும்படி மிரட்டுகிறான். 'இந்தக் கல்லாப் பெட்டிக்கான கோட் வேர்ட் தினந்தோறும் மாறும். என்னை மட்டும் அடிச்ச, உனக்கு எப்பவுமே அந்த கோட் வேர்ட் தெரியாம போயிடும்" என்கிறார் மேலாளர். ஆனால், அந்த கோட் வேர்டை திருடன் சட்டெனக் கண்டுபிடித்துவிடுகிறார். எப்படி?

விடை :

1. 2 - ராஜாவும், ராணியும் மட்டும் தானே சுற்றுலா போனாங்க.

2. பாராசூட்

3. இருபத்தி இரண்டு தான். சீனாவில் தானே சொல்லச் சொன்னோம், சீன மொழியில் இல்லையே !

4. code word =  'தினந்தோறும் மாறும்"

தெரிந்துக் கொள்ளுங்கள் !!

🎀 1994ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் அதிபராக நெல்சன் மண்டேலா பதிவியேற்ற நாள்.

🎀 சிலந்திகளுக்கு நீல நிறத்தில் இரத்தம் இருக்கும்.

43 ஆண்டுகள் வாழ்ந்து மடிந்த ஸ்பைடர்!
நம்பர்-16 என்று அழைக்கப்படும் சிலந்திப் பூச்சிதான், உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்த சிலந்தியாகும். கடந்த 1974ஆம் ஆண்டுமுதல் அந்த சிலந்தியை ஆய்வகத்தில் வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். ஒவ்வாமை காரணமாக அது சமீபத்தில் இறந்தது. சிலந்திகள் பொதுவாகவே அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

comedy

இது சிரிக்க மட்டுமே !!
சிவா : தைக்கும், சித்திரைக்கும் என்ன வித்தியாசம்..?
துரை : தை மாசம் நாம் சூரியனுக்கு பொங்கல் வைப்போம். சித்திரை மாசம் சூரியன் நமக்கு பொங்க வைக்கும்.
சிவா : 😀😀

ஒருவர் : ஏங்க, மதுரைக்கு துரு பஸ் இருக்கா?
மற்றவர் : இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...!
ஒருவர் : ?????

தலைமை ஆசிரியர் : டேய்.. எவன்டா தமிழ் ஆசிரியர் காலைப் பிடிச்சி வாரி விட்டது?
மாணவன் : சார்.. நேத்து ஸ்கூல் விட்டதும் அவர்தான் 'நாளை காலை வாருங்கள்"னு சொன்னார்.
தலைமை ஆசிரியர் : 😇😇

Friday 27 April 2018

மெஹந்தி அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமா?

மெஹந்தி அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமா?



 பண்டிகை காலம் என்றாலே பெண்களுக்கு மெஹந்திதான் ஸ்பெஷல். ஆனால், தங்கள் கைகளில் மெஹந்தி வைக்கும்போது அனைத்துப் பெண்களின் மனதிலும் தோன்றும் ஒரு எண்ணம் நம் கைகளில் மெஹந்தி நன்கு சிவக்குமா?, சிவக்காதா? என்பதுதான். எனவே கீழே குறிப்பிட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் சிவப்பதோடு, நீண்ட நாட்கள் நிறம் மாறாமல் இருக்கும்.

👐 முதலில் யூகலிப்டஸ் தைலம் சிறிதளவு கையில் தடவி, பின்னர் மெஹந்தி போட்டுக் கொண்டால் நாம் எதிர்பார்க்கும் சிவந்த நிறம் நிச்சயம் கிடைக்கும்.

👐 மெஹந்திப் போட்ட பிறகு குறைந்தபட்சம் இரண்டு மணிநேரமாவது அதை கலைக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். இரவு முழுவதும் அதை வைத்திருந்தால் கூடுதல் நிறம் பெறலாம்.

👐 கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் சிவக்க வேண்டுமானால், அதை கைகளுக்கு வைக்கும் முன்பாக கைகளில் சமையல் எண்ணெயைத் தடவிக் கொண்டால் நன்கு சிவக்கும்.

👐 மேலும், எலுமிச்சைச் சாற்றில் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அக்கலவையை கைகளில் வைத்த மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்தால், மெஹந்தி நன்கு சிவக்கும்.

👐 மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பிறகு, அதை நீரில் கழுவாமல், உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் தடவினால், கையில் உள்ள மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

👐 கைகளில் உள்ள மெஹந்தியில் எலுமிச்சைச் சாற்றினைத் தடவிய பின், ஒரு வாணலியில் கிராம்பை போட்டு நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அப்போது வாணலியில் உள்ள கிராம்பில் இருந்து வெளிவரும் புகையில் கைகளை சிறிது நேரம் காட்ட வேண்டும். இதன் மூலமும் மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

👐 கைகளில் மெஹந்தி வைத்தால் குறைந்தது 6 மணிநேரம் வைத்திருப்பதோடு, 3 மணிநேரத்திற்கு கைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தி சரியாக சிவக்காது.

பெண்களின் கைப்பையில் இருக்க வேண்டியவை, இருக்கக்கூடாதவை!

பெண்களின் கைப்பையில் இருக்க வேண்டியவை, இருக்கக்கூடாதவை!



பெண்களின் கைப்பையில் அவசியம் இருக்க வேண்டிய பொருட்கள் :

👉 பெண்கள் தினந்தோறும், பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் பயண அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். வாகனம் ஓட்டுபவராக இருந்தால் ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக கைப்பையில் வைத்திருக்க வேண்டும். கைப்பை தொலைந்து போகக்கூடும் என்பதால், அடையாள அட்டைகளின் நகலை மட்டும் வைத்திருக்கவும்.

👉 எப்போதும் ஒரு பேனா மற்றும் சில்லறை வைத்திருப்பதும் நல்லது. பெண்கள் கைப்பையில் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரும் எடுத்துச் செல்லலாம்.

👉 நாம் வெளியில் செல்லும் போது அலைப்பேசியில் சார்ஜ் தீர்ந்து போனால் அல்லது அலைப்பேசி தொலைந்து போனால், யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கும். எனவே, அவசரத்திற்கு உதவுவதற்கு, மிக முக்கியமான நபர்களின் எண்களை மட்டும் சிறிய அளவு குறிப்பேட்டில் குறித்து கைப்பையில் வைத்துக் கொள்ளலாம்.

👉 மேலும், செலவுக்குத் தேவையான பணத்தை மட்டும் கைப்பையில் வைத்திருப்பது நல்லது. சேஃப்டி பின்கள், ஹேர்பின்கள் மற்றும் தலைவலி மாத்திரை, தைலம் என தேவைக்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ளலாம்.

👉 பெண்கள் பாதுகாப்பிற்கு கவர் செய்யப்பட்ட சிறிய கத்தி மற்றும் பெப்பர் ஸ்ப்ரே ஆகியவற்றை கைப்பையில் எடுத்துச் செல்லலாம்.

இருக்கக்கூடாதவை :

👉 விசிட்டிங் கார்டுகளை அதிக அளவில் கைப்பையில் வைத்திருக்காமல் தேவைக்கு வேண்டிய கார்டுகளை மட்டும் வைத்துக் கொள்ளவும்.

👉 உணவுப் பொருட்கள் மற்றும் அதிக அளவில் வாட்டர் பாட்டில் என வைத்து எடையை அதிகரிக்க வேண்டாம். இதனால் கைப்பை சீக்கரமாக கிழிந்துவிடும்.

👉 பேருந்து பயணச்சீட்டு, குறிப்பெடுத்த காகிதங்கள், கடைகளில் வாங்கிய ரசீது என தேவைப்படாதவற்றை சேர்த்து வைக்காமல் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை கைப்பையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

👉 மேலும், பேனாவை மூடியில்லாமல் வைக்காதீர்கள், அவ்வாறு வைத்தால் பேனா முனையில் உள்ள மை கசிந்து கைப்பை பாழாகிவிடும். அதிக மேக்கப் சாதனங்களை வைத்திருக்க வேண்டாம்.

👉 மேலும், அதிக அளவு சில்லறைகளை எடுத்து செல்லாமல் தேவைக்கேற்ப வைத்திருங்கள். இல்லை என்றால் கைப்பையின் எடை அதிகரிக்கலாம்.