Monday 26 February 2018

இவையெல்லாம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்..!

இவையெல்லாம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்...!



⭐ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி இங்கு காண்போம்.

சாப்பிடக்கூடாத உணவுகள் :

⭐ உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

⭐ அதைப்போல் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை இனிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

⭐ மேலும் எருமை பால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.

⭐ ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

⭐ தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள், சர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களை தவிர்க்க வேண்டும்.

⭐ பிரட், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், தேங்காய், வேர்கடலை போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடனடியாக ஆற்றலை தருவதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

சாப்பிடக்கூடிய உணவுகள் :

⭐ மேலே கூறிய காய்கறிகளை தவிர மற்ற எல்லாக்காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். மேலும் பீட்ரூட், கேரட்டை அளவாக சாப்பிடலாம்.

⭐ ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

⭐ அதுமட்டுமில்லாமல் மோர், பசும்பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆகியவை சாப்பிடலாம்.

⭐ கோழிக்கறி, மீன், முட்டையின் வெள்ளைக்கரு போன்ற அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

⭐ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணெயை அளவாக பயன்படுத்த வேண்டும்.

⭐ டீ மற்றும் காபி ஆகியவற்றை அளவோடு தான் குடிக்க வேண்டும். வெள்ளரி, முளைக்கட்டிய பாசிப்பயிறு, சுண்டல், முந்திரி, பாதாம், வால்நட் (1 முதல் 2) போன்றவற்றை சாப்பிடலாம்.




No comments:

Post a Comment