Friday 27 April 2018

மெஹந்தி அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமா?

மெஹந்தி அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமா?



 பண்டிகை காலம் என்றாலே பெண்களுக்கு மெஹந்திதான் ஸ்பெஷல். ஆனால், தங்கள் கைகளில் மெஹந்தி வைக்கும்போது அனைத்துப் பெண்களின் மனதிலும் தோன்றும் ஒரு எண்ணம் நம் கைகளில் மெஹந்தி நன்கு சிவக்குமா?, சிவக்காதா? என்பதுதான். எனவே கீழே குறிப்பிட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் சிவப்பதோடு, நீண்ட நாட்கள் நிறம் மாறாமல் இருக்கும்.

👐 முதலில் யூகலிப்டஸ் தைலம் சிறிதளவு கையில் தடவி, பின்னர் மெஹந்தி போட்டுக் கொண்டால் நாம் எதிர்பார்க்கும் சிவந்த நிறம் நிச்சயம் கிடைக்கும்.

👐 மெஹந்திப் போட்ட பிறகு குறைந்தபட்சம் இரண்டு மணிநேரமாவது அதை கலைக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். இரவு முழுவதும் அதை வைத்திருந்தால் கூடுதல் நிறம் பெறலாம்.

👐 கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் சிவக்க வேண்டுமானால், அதை கைகளுக்கு வைக்கும் முன்பாக கைகளில் சமையல் எண்ணெயைத் தடவிக் கொண்டால் நன்கு சிவக்கும்.

👐 மேலும், எலுமிச்சைச் சாற்றில் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அக்கலவையை கைகளில் வைத்த மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்தால், மெஹந்தி நன்கு சிவக்கும்.

👐 மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பிறகு, அதை நீரில் கழுவாமல், உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் தடவினால், கையில் உள்ள மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

👐 கைகளில் உள்ள மெஹந்தியில் எலுமிச்சைச் சாற்றினைத் தடவிய பின், ஒரு வாணலியில் கிராம்பை போட்டு நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அப்போது வாணலியில் உள்ள கிராம்பில் இருந்து வெளிவரும் புகையில் கைகளை சிறிது நேரம் காட்ட வேண்டும். இதன் மூலமும் மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

👐 கைகளில் மெஹந்தி வைத்தால் குறைந்தது 6 மணிநேரம் வைத்திருப்பதோடு, 3 மணிநேரத்திற்கு கைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தி சரியாக சிவக்காது.

பெண்களின் கைப்பையில் இருக்க வேண்டியவை, இருக்கக்கூடாதவை!

பெண்களின் கைப்பையில் இருக்க வேண்டியவை, இருக்கக்கூடாதவை!



பெண்களின் கைப்பையில் அவசியம் இருக்க வேண்டிய பொருட்கள் :

👉 பெண்கள் தினந்தோறும், பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் பயண அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். வாகனம் ஓட்டுபவராக இருந்தால் ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக கைப்பையில் வைத்திருக்க வேண்டும். கைப்பை தொலைந்து போகக்கூடும் என்பதால், அடையாள அட்டைகளின் நகலை மட்டும் வைத்திருக்கவும்.

👉 எப்போதும் ஒரு பேனா மற்றும் சில்லறை வைத்திருப்பதும் நல்லது. பெண்கள் கைப்பையில் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரும் எடுத்துச் செல்லலாம்.

👉 நாம் வெளியில் செல்லும் போது அலைப்பேசியில் சார்ஜ் தீர்ந்து போனால் அல்லது அலைப்பேசி தொலைந்து போனால், யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கும். எனவே, அவசரத்திற்கு உதவுவதற்கு, மிக முக்கியமான நபர்களின் எண்களை மட்டும் சிறிய அளவு குறிப்பேட்டில் குறித்து கைப்பையில் வைத்துக் கொள்ளலாம்.

👉 மேலும், செலவுக்குத் தேவையான பணத்தை மட்டும் கைப்பையில் வைத்திருப்பது நல்லது. சேஃப்டி பின்கள், ஹேர்பின்கள் மற்றும் தலைவலி மாத்திரை, தைலம் என தேவைக்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ளலாம்.

👉 பெண்கள் பாதுகாப்பிற்கு கவர் செய்யப்பட்ட சிறிய கத்தி மற்றும் பெப்பர் ஸ்ப்ரே ஆகியவற்றை கைப்பையில் எடுத்துச் செல்லலாம்.

இருக்கக்கூடாதவை :

👉 விசிட்டிங் கார்டுகளை அதிக அளவில் கைப்பையில் வைத்திருக்காமல் தேவைக்கு வேண்டிய கார்டுகளை மட்டும் வைத்துக் கொள்ளவும்.

👉 உணவுப் பொருட்கள் மற்றும் அதிக அளவில் வாட்டர் பாட்டில் என வைத்து எடையை அதிகரிக்க வேண்டாம். இதனால் கைப்பை சீக்கரமாக கிழிந்துவிடும்.

👉 பேருந்து பயணச்சீட்டு, குறிப்பெடுத்த காகிதங்கள், கடைகளில் வாங்கிய ரசீது என தேவைப்படாதவற்றை சேர்த்து வைக்காமல் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை கைப்பையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

👉 மேலும், பேனாவை மூடியில்லாமல் வைக்காதீர்கள், அவ்வாறு வைத்தால் பேனா முனையில் உள்ள மை கசிந்து கைப்பை பாழாகிவிடும். அதிக மேக்கப் சாதனங்களை வைத்திருக்க வேண்டாம்.

👉 மேலும், அதிக அளவு சில்லறைகளை எடுத்து செல்லாமல் தேவைக்கேற்ப வைத்திருங்கள். இல்லை என்றால் கைப்பையின் எடை அதிகரிக்கலாம்.

Thursday 5 April 2018

எண்ணெய் வைத்து குளிப்பதில் உள்ள ரகசியம் என்ன...?

எண்ணெய் வைத்து குளிப்பதில் உள்ள ரகசியம் என்ன...?
எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியமா?


  நாம் குழந்தை பருவத்தில் தீபாவளியன்று அம்மா தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவாங்க. இது காலம் காலமாக நடைபெறும் வழக்கம். ஆனால் வளர்ந்த பிறகு நாம் அதை மறந்து விடுகிறோம். குறிப்பிட்ட இடைவெளியில் உடலைப் பராமரிப்பதற்கு எண்ணெய்க் குளியல் ஒரு சிறந்த வழிமுறை.

🌟 இப்போது நமக்கு எளிதாக வருகிற உடல் தொந்தரவுகள் நம் முன்னோர்களுக்கு வரவில்லை. அதற்கு காரணம் அன்றைய உணவு மற்றும் வாழ்க்கை முறையாகும். அதில் எண்ணெய் குளியலும் அடங்கும்.

🌟 எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வாத, பித்த, கப தோஷங்கள் உடலில் இருக்க வேண்டிய சரியான அளவில் இருக்கும். எண்ணெய் குளியல், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள சூட்டை குறைக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் நன்கு செயல்படும்.

🌟 எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நம் உடலுக்கு மட்டும் இல்லாமல் தலை முடியும் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெயில் கொழுப்பு சத்துள்ளது. இது உடலுக்கு புத்துணர்ச்சி தரும். நம் சருமத்தில் சின்ன துவாரங்கள் உள்ளன. எண்ணெயை தலை மற்றும் உடலில் தடவும் போது இவை சருமம் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகாமல் பளபளவென்று இருக்கும்.

🌟 எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், தோலின் மூலமாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு லிம்ஃபாட்டிக்ஸ் என்று சொல்லப்படுகிற நிணநீர்க் கோளத்தில் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கிறது என்று அறிவியல் ஆய்வும் ஒப்புக்கொள்கிறது.

🌟 லிம்ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடல் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், உடலில் உருவாகும் கழிவுகளை வெளித்தள்ளும் வேலையையும் செய்கிறது.