Monday 26 February 2018

உங்கள் கையெழுத்து உங்களை பற்றி என்ன சொல்கிறது?

உங்கள் கையெழுத்து உங்களை பற்றி என்ன சொல்கிறது?
உங்கள் கையெழுத்தை வைத்தே உங்கள் குணநலன்களை சொல்ல முடியும் !!

🌟 கையெழுத்து குறித்து ஆராயும் கல்விக்கு கிராபாலஜி என்று பெயர். இது ஒரு பழங்கால கலையாகும். இதன்படி ஒருவரது கையெழுத்தை ஆராய்வதன் மூலம் அவரது குணாதிசயங்கள், எதிர்காலம் ஆகியவை குறித்து அறிந்துக்கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது.

🌟 மனிதர்களின் கையெழுத்து ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் கையெழுத்தும் ஏதாவது ஒரு வகையில் மாறுபட்டதாகவே இருக்கும். எழுத்துக்களை எழுதும் முறை, அந்த எழுத்தின் மீது ஏற்படுத்தும் அழுத்தம், வார்த்தைகள் இடையே கொடுக்கும் இடைவெளியின் தூரம் உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

அழுத்தி எழுதுபவராக நீங்கள்?

🌟 எழுத்தின் மீது ஒருவர் கொடுக்கும் அழுத்தம் எவ்வாறு உள்ளது என்பதன் மூலம் ஒருவரது விடாமுயற்சி மற்றும் பிடிவாத குணம் குறித்து அறியலாம்.

🌟 காகிதத்தில் ஒருவர் எழுதும் எழுத்து, அந்த காகிதத்தின் பின்புறம் தெரிந்தால் அவர் ஊக்கமும், உற்சாகமும் நிறைந்தவராக இருப்பார். அதே நேரத்தில் அவரிடம் பிடிவாத குணமும் அதிகமாக இருக்கும்.

🌟 உங்களது கையெழுத்து காகிதத்தின் பின்புறம் தெரியவில்லை என்றால் நீங்கள் எதிலும் முனைப்புடன் செயல்படக்கூடியவர்கள், எளிதில் பிறரிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களின் விருப்பத்தின்படி நடப்பதை விரும்பமாட்டீர்கள். உங்கள் விருப்பத்தின்படியே எதையும் செய்வீர்கள்.

எழுத்தின் கோணம் :

🌟 சிலர் எழுதும்போது இடது அல்லது வலதுபுறத்தில் சரிவாக எழுதுவதுண்டு. இவ்வாறு எழுத்துக்களை கோணலாகவும், நேராகவும், சாய்த்தும் சிலர் எழுதுவது உண்டு.

🌟 வலது அல்லது இடதுபுறம் சாய்த்து எழுதுவதன் மூலம் ஒருவர் எந்த அளவுக்கு நட்புடன் பழகுவார் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

🌟 ஒருவரது எழுத்து வலதுபுறம் சாய்வாக இருந்தால் அவர் திறந்த மனதுடன் பழகுவார். இயற்கையாகவே கலகலப்பாக பேசும் குணம் கொண்டவர்.

🌟 இடதுபுறம் சாய்வாக எழுதுபவர்கள் அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரிடம் எளிதில் பேசிப்பழக தயங்குவார்கள்.

🌟 எழுத்துக்கள் நேராகவும், எழுதும் வார்த்தைகள் நேர்க்கோட்டிலும் அமைந்து இருந்தால் அவர் திட்டமிட்டு வாழ்பவர். சந்தோஷம், துக்கம் எதுவாக இருந்தாலும் அதை சமமாக எடுத்துக்கொள்பவர்.

🌟 இன்னும் சிலர் ஒரு வரியில் பல்வேறு விதமாக எழுதும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் ஒரு எழுத்து வலப்புறமும், மற்றொரு எழுத்து இடப்புறமும், சில எழுத்துக்கள் நேராக ஒரே நேர்க்கோட்டிலும் இருக்கும்.

🌟 இப்படிப்பட்ட கையெழுத்துக்கு சொந்தக்காரர்கள் நிலையற்ற தன்மை கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் குழப்பத்தில் இருப்பார்கள். எந்த முடிவையும் தெளிவாக எடுக்க தயங்குவார்கள். தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடியவர்கள்.

எழுத்தின் அளவு :

🌟 ஒருவர் எழுதும்போது அவர் எழுதும் எழுத்தின் அளவை வைத்து அவர் எந்த அளவுக்கு தன்னம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

🌟 ஒருவரது எழுத்து பெரிய அளவில் அழுத்தமாக இருந்தால் அவரது மனஉறுதியும், தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். எழுத்துக்கள் சிறிய அளவில் இருந்தால் அவரிடம் தன்னம்பிக்கை குறைவாக காணப்படும்.

🌟 பெரிய எழுத்துக்களாக எழுதுபவர்கள் சமூக வாழ்வில் வெற்றியாளர்களாக திகழ்வார்கள். அவர்கள் சொல்லிலும், செயலிலும் தன்னம்பிக்கை வெளிப்படும்.

No comments:

Post a Comment