Thursday 5 April 2018

எண்ணெய் வைத்து குளிப்பதில் உள்ள ரகசியம் என்ன...?

எண்ணெய் வைத்து குளிப்பதில் உள்ள ரகசியம் என்ன...?
எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியமா?


  நாம் குழந்தை பருவத்தில் தீபாவளியன்று அம்மா தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவாங்க. இது காலம் காலமாக நடைபெறும் வழக்கம். ஆனால் வளர்ந்த பிறகு நாம் அதை மறந்து விடுகிறோம். குறிப்பிட்ட இடைவெளியில் உடலைப் பராமரிப்பதற்கு எண்ணெய்க் குளியல் ஒரு சிறந்த வழிமுறை.

🌟 இப்போது நமக்கு எளிதாக வருகிற உடல் தொந்தரவுகள் நம் முன்னோர்களுக்கு வரவில்லை. அதற்கு காரணம் அன்றைய உணவு மற்றும் வாழ்க்கை முறையாகும். அதில் எண்ணெய் குளியலும் அடங்கும்.

🌟 எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வாத, பித்த, கப தோஷங்கள் உடலில் இருக்க வேண்டிய சரியான அளவில் இருக்கும். எண்ணெய் குளியல், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள சூட்டை குறைக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் நன்கு செயல்படும்.

🌟 எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நம் உடலுக்கு மட்டும் இல்லாமல் தலை முடியும் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெயில் கொழுப்பு சத்துள்ளது. இது உடலுக்கு புத்துணர்ச்சி தரும். நம் சருமத்தில் சின்ன துவாரங்கள் உள்ளன. எண்ணெயை தலை மற்றும் உடலில் தடவும் போது இவை சருமம் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகாமல் பளபளவென்று இருக்கும்.

🌟 எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், தோலின் மூலமாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு லிம்ஃபாட்டிக்ஸ் என்று சொல்லப்படுகிற நிணநீர்க் கோளத்தில் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கிறது என்று அறிவியல் ஆய்வும் ஒப்புக்கொள்கிறது.

🌟 லிம்ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடல் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், உடலில் உருவாகும் கழிவுகளை வெளித்தள்ளும் வேலையையும் செய்கிறது.

No comments:

Post a Comment