Wednesday 2 January 2019

நாமும் நம் குழந்தைகளும் கண் குறைபாடுகளை தவிர்ப்பது எப்படி?

நாமும் நம் குழந்தைகளும் கண் குறைபாடுகளை தவிர்ப்பது எப்படி?
டிஜிட்டல் திரைகள் அதிகம் பயன்படுத்தும், நாமும் நம் குழந்தைகளும் கண் குறைபாடுகளை தவிர்ப்பது எப்படி?
வெகு சில மரங்களும், தாவரங்களும் மட்டுமே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து அழியாமல் தமிழர்களுடன் பயணித்து வருகின்றன. அதற்கான முதற்காரணம் அவற்றின் மருத்துவ குணங்களே அன்றி வேறில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் திணை அரிசி, பனை மரம், முருங்கை மரம் போன்றவை. இவற்றுள் முருங்கை மரத்தின் பலன்கள் அதிகமானது. எனவே தான் பல ஆயிரம் ஆண்டுகளாக முருங்கை நமது வாழ்க்கையுடன் பயணித்து வந்துள்ளது.

கியூபாவில் முருங்கைக்கு 'ஆயபiஉ வுசநந' என்று பெயரிட்டு மரியாதைக்குரிய பெடல் காஸ்ட்ரோ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அரும்பெரும் மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முருங்கை இலைக்கு நிறைய பலன்கள் இருந்தாலும் அவற்றுள் முக்கியமானது அவற்றில் நிறைந்துள்ள வைட்டமின் யு சத்து தான். கேரட்டை விட 7 மடங்கு அதிக சத்து இதில் உள்ளது. முருங்கை இலையினை உணவின் ஒரு பகுதியாக தொடர்ந்து எடுத்துக் கொண்டால் நமது கண்கள் ஆரோக்கியமாக இருப்பது நிச்சயம்.மேலும், இந்த பயன்கள் அனைத்தும் முருங்கை மரத்தின் இலைகளில் தான் உள்ளதே தவிர இன்று வரும்  முருங்கை செடியின் இலைகளில் இல்லை. அதுவும் இலைகளை நிழலில் உலர்த்தி பின்பு பொடியாக்கினால் மட்டுமே அதன் சத்துக்கள் நமக்கு கிடைக்கும். 

No comments:

Post a Comment