Wednesday 27 December 2017

இந்த அளவுக்கு நீங்க யோசிச்சு இருக்கீங்களா?

இந்த அளவுக்கு நீங்க யோசிச்சு இருக்கீங்களா?
கொஞ்சம் சிரிங்க பாஸ் !!

மனைவி : போதை ஏறிடுச்சுன்னா.. அதுக்காக இப்படியா?
கணவன் : ஏன்? அப்படி என்ன செஞ்சேன்... கமலா?
மனைவி : உங்க கையில இருக்கறது பிராந்தி பாட்டில் இல்ல... கெரஸின் பாட்டில். 😇 😇

ஆசிரியர் : உன் பேரு என்னம்மா?
பெண் : சௌமியா.
ஆசிரியர் : உங்க வீட்டுல உன்னை எப்படி கூப்பிடுவாங்க?
பெண் : தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.... பக்கத்துல இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க... 😆😆

டாக்டர் : இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்.
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை.. 😌😌
இது வேடிக்கைக்காக மட்டுமே !!
🌟 வாயில் இல்லாத பல், உடம்பில் உள்ள பல், என்ன பல்? - சோம்பல்.

🌟 கனவைக் காட்டும் திரை எது? - நித்திரை.

🌟 எல்லா மனிதர்களுக்கும் பிடித்த மை எது? - இளமை, இனிமை.

🌟 பொய் சொல்லும் ஆங்கில மாதம் எது? - ஜூலை.
சிந்திக்க வேண்டிய கதை !!
ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான். அப்போது கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான். முட்டைகள் அனைத்தும் உடைந்துவிட்டன.

கூட்டம் கூடி விட்டது. வழக்கம்போல் இலவச உபதேசங்கள். : பாத்து போக கூடாதா? என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?

அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார். அடடா... ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? ஏதோ என்னால் முடிந்த உதவி என ஒரு பத்து ரூபாயை கொடுத்தார்.

அதோடு தம்பி இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமல்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிக்கொள் என்றார். மக்களும் இவரது செய்கை மற்றும் பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.

முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது. அந்த பையனுக்கே அளவில்லா மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

அப்போது ஒருவர் அந்த பையனிடம் தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்ட என்ன பாடு படுவயோ? என்றார்.

பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். 'அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி".

No comments:

Post a Comment